சென்னை - திருச்சி ஹைவேஸ் பரிதாபங்கள்
சென்னை - திருச்சி ரூட்ல ஒரு ஆயிரம் தடவையாவது பஸ்லயோ, கார்லயோ போய் போரடிச்சிடுச்சு. இந்த ரூட் பத்தி நான் நோட் பண்ண விஷயங்களை இங்க எழுதுறேன். பிடிச்சிருந்தா ‘க்ளாப்ஸ்’, நல்லாயிருந்தா ஷேர் பண்ணுங்க 😘

- பஸ்/ட்ரெய்ன்: பஸ்ல போகணும்னா கோயம்பேடுல ஏறுறதுதான் பெஸ்ட். வீக்கெண்ட்ஸ்ல பெருங்களத்தூர்ல பஸ் கிடைக்கும்னு நெனச்சா வீக்கெண்ட் அங்கேயே எண்ட் ஆகிடும்! SETCனா 11 மணிக்கு ஒரு வால்வோ ஏசி வண்டி வரும். ஆனா, அது சீட்டிங் டவுன்பஸ் ஸ்டைல்ல இருக்கும். முதுகு பேர்ந்துடும். பட் சமாளிக்கலாம். பழைய SETC பஸ்களுக்கு இது பரவாயில்ல. SETC வண்டிக சென்னைக்கு மிக அருகில் விக்கிரவாண்டி தாண்டி ரோட்டோரமா ரிப்பேராகி நின்னுடும். (ரியல் எஸ்டேட் காரங்க இந்த சர்வீஸ யூஸ் பண்ணிக்கலாமே!) பிரைவேட்னா ஸ்ரீரங்கநாதன் ட்ராவல்ஸ்(பஸ் நம்பர், ட்ரைவர்கள் கூட மனப்பாடம்), பர்வீன், எஸ்.ஆர்.எஸ்தான். கே.பி.என்ல இருக்கதுலயே பழைய வண்டியத்தான் திருச்சி-சென்னை ரூட்டுக்கு வுடுவானுங்க. ட்ரெயின்னா ராக்ஃபோர்ட்தான். எப்படியாவது ஏசி பிடிச்சிடுங்க. இதுக்கு ஒரு டெக்னிக்கல் காரணம் இருக்கு. ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ்ல இருக்கது LHB ரேக். இதுல ஏசி கோச்லலாம் உள்ள சத்தமே கேக்காது. நைட் நல்லா தூங்கலாம். ஆனா, பழைய LHB கோச் வந்தா இட்ஸ் ஆல் ஃபேட்தான். ஒரு ஆக்ஸில்ல இருந்து மட்டும் டமார் டமார்னு சத்தம் வரும். வீல் தண்டவாளத்துல ஓடுதா இல்ல தரையில ஓடுதான்னே டவுட்டா இருக்கும்.

- பெருங்களத்தூர்: கார்ல போனீங்கன்னா பெருங்களத்தூர் ட்ராஃபிக்தான் கடுப்பா இருக்கும். முடிச்சூர் பைபாஸ் வழியா முன்னாடி பெருங்களத்தூர பைபாஸ் பண்ணிட்டு இருந்தேன். இப்ப அந்த ரூட் எல்லாருக்கும் தெரிஞ்சு கும்பல் ஆகிடுச்சு. இன்னொரு வழி மேடவாக்கம் வழியா வண்டலூர் வர்றது. இது மெகா சுத்து. பட் ஓகே ரகம். தீபாவளி, பொங்கல் டைம்ல நான் இ.சி.ஆர்- பாண்டிச்சேரி - விழுப்புரம் ரூட்ல போயிடுவேன். பெஸ்ட்டு!
- ட்ரைவிங்: சென்னை — திருச்சி ரூட்ல ரெகுலா கார் ஓட்டினா நிறைய பேட்டர்ன்ஸ் பார்க்கலாம். பெருங்களத்தூர் பஸ் ஸ்டாண்ட் தாண்டினவுடனே எல்லா கார் காரணும் ஆக்ஸிலரேட்டர்ல ஏறி நின்னிக்குவாங்க. அப்படியே வேகமா வந்து, செங்கல்பட்டு டோல்ல க்யூ கட்டி நிப்பானுங்க. நம்ம பொறுமையா வந்தாலும், கரெக்டா பிளான் பண்ணா வேகமா மூவ் ஆகுற லேன்ல நின்னுக்கலாம். | திண்டிவனம் தாண்டவும் நம்ம ஆட்களுக்கு பசி எடுத்துடும். லெஃப்ட் லேன்ல அப்படியே கடைகள ஸ்கேன் பண்ணிக்கிட்டே ஓட்டுவாங்க. சில பேர் ரைட் லேன்ல வேகமா போய்ட்ருப்பாங்க. திடீர்னு ஒரு மோட்டல பாத்து லெஃப்ட்ல ஒடிப்பாணுங்க. பேட் கய்ஸ். | உளுந்தூர்பேட்டைக்கு முன்னாடி ஒரு காபி டே இருக்கு. பாத்ரூம் ஓரளவுக்கு நீட்டா இருக்கும். இங்க ப்ராசஸ்டு ஃபுட்ஸ் சாப்பிடறத விட, பிளாக் காஃபி ஸ்ட்ராங்கா வாங்கி குடிக்கலாம். | உளுந்தூர்பேட்டை தாண்டினவுடனே பாதி வண்டி ஸ்லோ ஆகிடும். ஏன்னா இவ்வளவு நேரம் விரட்டிக்கிட்டு வந்த சில வண்டிங்க சேலம் ரூட்ல போயிடும். உடனே நம்மாளுங்களுக்கு போரடிச்சு போய் பழைய ராஜா கானங்களை போட்டுட்டு உருட்டுவாய்ங்க. | பெரம்பலூர் தாண்டிட்டா சுத்தம். பாதி காருங்க உருட்டு உருட்டுனு உருட்டுவாங்க. ஆனா, சமயபுரம் டோல் தாண்டிவுடனே வேகம் வந்துடும். வீட்டுக்கிட்ட வந்துட்டம்ல!!.
- திருச்சில இருந்து சென்னை வரும்போது பாத்தீங்கன்னா திண்டிவனம் டோல் தாண்டினவுடனே பாதி காருங்க சீறிப்பறக்கும். ஆனா பாருங்க, கும்பகோணம் காபி கடைங்க இந்த செக்டர்லதான் அதிகம். பாதி காருங்க அப்படியே லெஃப்ட்ல அணைச்சுக்கிட்டே ஓட்டுவாணுங்க. எந்த கடைல நிறுத்தலாம்னு கன்பியூஷன்தான்!.
- அதே மாதிரி செங்கல்பட்டு டோல்ல இருந்து தாம்பரம் வரைக்கும் ரொம்பவே கவனமா ஓட்டணும். திருச்சில இருந்து உருட்டிட்டே வந்து, இங்கதான் பாதி வண்டிக விரட்டுவாய்ங்க. அதுவும் போர்டு ஃபேக்டரி தாண்டினவுடனே எதிர் லேன்ல இருந்து வருவாங்க. ஊருக்குள்ள இருந்து வந்து நிக்காம எதிர் லேனுக்கு போவாங்க. லெஃப்ட்ல பஸ் ஸ்டாப்ஸ் இருக்கும். இங்க பஸ் நிக்குதோ இல்லயோ ஷேர் ஆட்டோ நிக்கும். ரொம்ப கவனமா ஓட்ட வேண்டிய செக்ஷன் இது.
- அல்டிமேட் அஜீத்கள்: ஊர்ல இருக்க நரேன் கார்த்திகேயன் கள், அஜீத்குமார்களுக்கெல்லாம் இந்த ஹைவேஸ்தான் ரேஸ் ட்ராக். இதுல பல விதமான ஆட்கள் இருக்காங்க. உதாரணத்துக்கு இந்த இனோவா, ஃபார்ச்சூனர், சுமோ, டவேரா, ஐ20 எலீட் மாதிரியான கார்ல போறவங்க. டிம்மு டிப்பு அடிச்சுக்கிட்டே வண்டி பின்னாடி ஒட்டிக்கிட்டு வருவாய்ங்க. கொஞ்சமும் மேனர்ஸ் தெரியாது. லாரி ட்ரைவர்ஸ மதிக்கவும் தெரியாது. லெஃப்ட்ல முந்துறது, ஒரு லாரிய இன்னொரு லாரி ஓவர்டேக் பண்ணும்போது பின்னாடியே போய் ஹாரன் அடிக்கிறதுன்னு கடுப்பேத்துவாய்ங்க. அப்படி என்ன அவசரம்னு தெர்ல. | என்ன கொடுமைன்ன இவிய்ங்க ஆ.. ஊன்னு விரட்டிக்கிட்டு நம்மள ஓவர்டேக் பண்ணுவாய்ங்க. ஆனா, சின்னதா டிம் டிப் மட்டும் பண்ணிட்டு இவங்களையும் சேர்ந்து அமைதியா பிஎம்டபிள்யூ ஓவர்டேக் பண்ணிட்டு சிட்டா பறந்துடும். அப்ப இவங்க ஈகோல மண்ணு விழும் பாருங்க…!!!
- புது செகண்ட் ஹேண்ட் கார் அங்கிள்கள்: பழைய மாருதி 800 கார்/ஆல்ட்டோ/ஸ்விஃப்ட் வாங்கிட்டு, ‘ஒரு தடவையாவது கார்ல குடும்பத்தோட சொந்த ஊருக்கு கெத்தா போகணும்லே!’ன்னு 10 பேர அந்தக் கார்ல பேக் பண்ணிட்டு, பாட்ட சத்தமா போடுட்டு கரகரன்னு சில ஃபேமிலிக்கள எப்பவும் இந்த ரூட்ல பாக்கலாம். கஷ்டப்பட்டு நம்மள ஓவர்டேக் பண்ணிட்டு பெருமையா முகத்த வச்சுக்கிட்டு ஓட்டுவாங்க இந்த அங்கிள்ஸ். சில கார்ல ட்ரைவர ஓட்ட விட்டுடுவாங்க. இப்படி ஒரு வண்டில இருபது பேருன்னு ட்ரைவர் சிடுமூஞ்சியோட ஓட்டுவார். பக்கத்து சீட்ல ஓனர் அங்கிள் ஒரு பாப்பாவுக்கு சிப்ஸ் ஊட்டிக்கிட்டே பெருமையா உக்காந்திருப்பார். அவர் மனசுல பெட்ரோல் பில் கணக்கு ஓடிட்டிருக்கும். பின் சீட்ல இருந்து பாட்ட வேற மாத்தச் சொல்லிக்கிடே இருப்பாங்க. ஓர் நடமாடும் டி.ஜே லெவலுக்கு மனுஷன் பாட்டு மாத்துவார். சில கார்ல சண்டைகள் கூட நடக்கும். இந்த மாதிரி சம்பவங்கள் பாக்குறதுக்காகவே இந்தக் கார்கள ஓவர்டேக் பண்ணாம கொஞ்ச நேரம் ஃபாலோ பண்ணிருக்கேன்.
- சொந்தமா கார் வாங்கி குடும்பத்டோட ஜாலியா போகணும்னு நினைக்கிறதுல தப்பேயில்ல. ஆனா, எந்தக் கார்ல எவ்வளவு பேர் போகலாம். கார் என்ன கண்டிஷன்ல இருக்குன்னு தெரிஞ்சுக்கணும். பழைய டாடா சுமோ/சஃபாரியில ஊரையே ஏத்திக்கிட்டு வேகமா ஓட்டுறத பாக்கும்போதெல்லாம் பக்குன்னு இருக்கும். அந்தக் கார்லலாம் அவ்வளவு வெயிட்டோட வேகமா பிரேக் அடிச்சா என்ன ஆகும் தெரியுமா?
- டெயில்கேட் டெட்டனேட்டர்கள்: இருக்கதுலயே அதிகம் டேஞ்சர் இந்த பாய்ஸ்னால தான்.ஒவ்வொரு தீபாவளி, பொங்கல் அன்னிக்கும் நியூஸ் பாருங்க. விழுப்புரம் அவுட்டர்ல எங்கயாச்சும் ரெண்டு பஸ், ஒரு லாரி, ரெண்டு கார்னு பைல்-அப் ஆக்சிடன்ட்ல ஒண்ணுக்குப் பின்னாடி ஒண்ணு மோதி நியூஸாகியிருப்பாங்க. காரணம் டெயில்கெட்டிங். உதாரணத்துக்கு நான் லெஃப்ட் லேன்ல போறேன்னு வச்சுக்குவோம். எனக்கு முன்னாடி ஒரு 100 அடியில ஒரு லாரி ரைட் லேன்ல போகுது. ஒரு பஸ் என்ன ரைட்ல முந்தி, அந்த லாரிய லெஃப்ட்ல முந்துதுன்னா இந்த கார் ஓட்டுறவங்களும் அந்த பஸ் பின்னாடி ஒட்டிக்கிட்டே போய் லாரிய ஓவர்டேக் பண்ணிடலாம்னு நினைப்பாங்க. பின்னாலயே மூணு கார் வரும். என்ன கொடுமைன்னா அந்த லாரிக்கு முன்னாடி லெஃப்ட் லேன்ல ஒரு ஆட்டோ போய்கிட்டு இருந்தது எனக்கு, லாரி ட்ரைவருக்கு, பஸ் ட்ரைவருக்கும் மட்டும்தான் தெரியும். பஸ் பின்னாடி ஒட்டிக்கிட்டு வந்த மூணு கார்களுக்கும் தெரியாது. லாரிய ஓவர்டேக் பண்ண வேகத்துல பஸ் ட்ரைவர் ரைட்ல ஒடிச்சு முன்னாடி போயிடுவாரு. ஆனா, பின்னால வந்த காருங்களுக்கு இந்த ஆட்டோ செம ஷாக்கா இருக்கும். மொதல்ல போனவன் சடன் பிரேக் போடுவான். எல்லாரும் ஸ்கிட் ஆகி, ஒருத்தர் பின்னாடி ஒருத்தர் மோதிக்குவாய்ங்க. இவங்க பண்ண கூத்துக்கு நாமளும் சடன் பிரேக் போடணும். அப்ப நம்மள எவனாவது டெயில்கெட் பண்ணிக்கிட்டு இருந்தா பம்பர் காலிதான். எனவே மக்களே நோ டெயில்கேட்டிங்.

- ஷெங்கல்பட் செந்தேன் மலர்கள்: சென்னை - திருச்சி ரூட்டில் நெக்ஸ்ட் புதுசா கல்யாணமான ஜோடிகள்தான். இவங்கள்ல ரெண்டு விதம். பண்டிகை லீவுக்கு பஸ், ட்ரெய்ன்ல டிக்கெட் எடுக்காம யூனிக்கார்ன்லயே ஊருக்குப் போற ஜோடிகள் ஒண்ணு. இன்னொன்னு புது ஹேட்ச்பேக் கார்ல தின்னுக்கிட்டே ஊருக்குப் போற ஜோடிகள். இதுல யுனிகார்ன் ஜோடிகள்தான் பாக்க பாவமா இருக்கும். ஜெர்கின், மஃப்ள்ஃர், பேக்னு எல்லாத்தையும் மாடிக்கிட்டு அர்த்தராத்திரி குளிர்ல எல்லா வண்டியையும் லெஃப்ட்ல ஓவர்டேக் பண்ணிட்டு போயிட்டே இருப்பாய்ங்க. ஏன்யா உங்களுக்குலாம் முதுகு வலிக்காதா? கார்ல போற ஜோடிகள்ல பையன்தான் பாவம். தம்பி இப்ப கெத்து காட்ட வேண்டிய கட்டாயத்துல இருப்பாப்ல. சிங்கிளா இருந்தப்ப கும்பகோணம் காபி கடையில 20 ரூபாய்க்கு காபி குடிச்சவன் இப்ப காபி டேல 200 ஓவா கோல்டு காபிக்கு நிறுத்த வேண்டிய கட்டாயம். இன்னொன்னு பாட்டுல்லாம் வேற கரெக்ட்டா செலெக்ட் பண்ணி கொண்டு வரணும். அடுத்து எவன்கிட்டயும் மானாவாரியா திட்டு வாங்காம ஓட்டணும். பாவம் அந்தப் பொண்ணும் எவ்வளவு நேரம்தான் இவனுக்கு கம்பெனி கொடுக்கும். திண்டிவனம் தாண்டறதுக்குள்ள தூங்கிடும். இவன் சிங்கிளாவே சமயபுரம் டோல்கேட் தாண்டுவான்.

- இவங்க ரெண்டு பேரையும்விட பாவம் பெருங்களத்தூர் பஸ் ஸ்டாண்ட்ல விடிய விடிய நிக்கும் ஜோடிகள்தான். ‘ஒரு டிக்கெட் புக் பண்ணத் தெரியல’ன்னு ஒரு கடுப்ஸ் ஃபேஸோட அந்தப் பொண்ணு நிக்கும். புது மாப்ள ஒவ்வொரு பஸ்ஸா ஏறி சீட் இருக்குதான்னு பாப்பாப்ல. என்ன காமெடின்னா பெருங்களத்தூர்ல பஸ்லாம் எப்பவும் மூவிங்லயே இருக்கும். இவன் ஓடுற பஸ்ல ஏறி, சீட் இல்லன்னு கண்டுபிடிச்சு எறங்கறதுக்குள்ள பஸ் 200 அடி தாண்டிடும். எங்க அந்தப் பொண்ணு புருஷன காணோமேன்னு பதறுமேன்னு தானே நினைக்கிறீங்க.. இல்ல இல்ல.. ‘எப்படியும் சீட் இல்லன்னுதானே திரும்ப வருப்போறான்’னு அந்தப் பொண்ணு கூலாதான் நிக்கும். இவன்தான் ஃபீலாகிப் போய் ‘லாஸ்ட் சீட் ரெண்டு இருந்துச்சு. உனக்கு கஷ்டமா இருக்குமேன்னு விட்டுட்டேன்’னு சூர்யா மாதிரி சொல்லுவான். அப்ப அந்தப் பொண்ணு ஒரு லுக்கு விடும் பாருங்க…!
— ரிட்டர்ன் ட்ரிப்ல மீட் பண்ணலாம். பாய்!
